தனியார் பேருந்து மோதியதில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.
பொகவந்தலாவ கெம்பியன் - இரானிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரபகுதிக்குச் சென்ற தனியார் பேருந்தே விபத்துக்குள்ளாகியது.
விபத்தில் 3 வயது நிரம்பிய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் பொகவந்தலாவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து, பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்ததோடு மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment