நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசேட நடவடிக்கைகளின்போது, 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை முற்பகல் 6 மணி தொடக்கம் நேற்று முற்பகல் 6 மணி வரையான காலப் பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது 10 ஆயிரத்து 170 போக்குவரத்து தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையம் தெரிவித்துள்ளது.
தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பித்தக்கது.
0 comments:
Post a Comment