தேடுதல் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 22 தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி - பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
57 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment