தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இணையதளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம்
மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது ஏப்ரல் 19-ம் தேதி தேர்வு முடிவை வெளியிடப்படும் என அரசு
அறிவித்தது. எனவே, விரைவாக வினாத்தாள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கணணியில் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவு பெற்றது. மதிப்பெண் பட்டியலும் தயாரானது.
இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. இதுதவிர தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய பரீட்சார்த்திகளின் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.
பரீட்சார்த்திகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களுடைய பதிவு எண், பிறந்த திகதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்
#Plus2Result #TNResults
0 comments:
Post a Comment