பாகிஸ்தான் சந்தையில் குண்டு வெடித்ததில் 16 பேர் உடல்சிதறி உயிரிழந்துள்ளனர்.
பலுசிஸ்தான் மாநிலத்தின் தலைநகரான குவெட்டாவில் ஹசார்கஞ்சி பகுதியில் உள்ள சந்தையிலேயே சக்திவாய்ந்த குண்டு ஒன்று இன்று அதிகாலை வெடித்தது.
இதனால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட அங்கு கூடியிருந்த மக்கள் சிதறி ஓடினர்.
குண்டுவெடிப்பில் அங்கிருந்த பல கடைகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்தன.
சம்பவத்தில் 16 பேர் உடல்சிதறி உயிரிழக்க, மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் சம்பவ படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment