அம்பாறை கல்முனை - சாய்ந்தமருது பகுதியிலிருந்து, இதுவரையில் 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ்.ஐஸ். தீவிரவாதிகளைத் தேடி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று மாலை குறித்த பகுதிகளில் நடத்திய சுற்றுவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது துப்பாக்கிப் பிரயோக மோதல் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் நடந்தேறியது.
6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து, தெரிவிக்கையில், இந்தச் சம்பவத்தில் பாதுகாப்புப் படையினருக்கு எவ்விதப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், பரவிவரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சடலங்கள் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து ஜிஹாத் தொடர்பான புத்தகங்கள், பெருமளவான பணம், வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment