மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இதுவரையில் 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் காலை 7 மணி முதல் 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
”தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. 1 சதவீத அளவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது, அது உடனடியாக சரிசெய்யப்படுகிறது”. என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment