தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம், ஹவுராவிலிருந்து தில்லி நோக்கி பூர்வா விரைவு தொடருந்து, புறப்பட்டது. கான்பூர் அருகே ரூமா எனும் கிராமம் வழியே சென்றுகொண்டிருந்தபோது தொடருந்தின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் 13 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு மீட்பு குழு மீட்பு பணிகளை முன்னெடுத்தது.
0 comments:
Post a Comment