சீன நாட்டில், அடுக்குமாடி கட்டடத்தில் லிப்டின் கேபிள் அறுந்து விழுந்ததில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தகவலை வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஹேபேய் மாகாணத்தின் ஹெங்சூய் நகரில் அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
ஏராளமான தொழிலாளர்கள் நேற்று காலை வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், சில தொழிலாளர்கள் கட்டடத்தின் மேல் பகுதியிலிருந்து லிப்டில் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் லிப்டின் கேபிள் திடீரென அறுந்து வீழ்ந்தது.
இதனால் லிப்ட் அதிவேகத்தில் தரையில் விழுந்தது. குறித்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment