புதுவருடத்தில் 110 பேர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டடதுடன் 8 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மதுபோதையில் ஏற்பட்ட தகராறு, அடிதடி, குழுமோதல், வாள்வெட்டு, வாகன விபத்து என்பன காரணமாகவே காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் புதுவருட தினத்தன்று காலை 6 மணியில் இருந்து நேற்றய முன்தினம் இரவு 12 மணிவரை 62 பேரும், நேற்று அதிகாலை 12 மணியில் இருந்து நண்பகல் வரை 48 பேரும் இச் சம்பவங்களால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை வவுனியா, கோவில்குளம், உமாமகேஸ்வரன் சந்திப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கார் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் சேதடைந்த நிலையில் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டது.
இக்குழு மோதல் தொடர்பில் மூவர் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
பிறிதொரு பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டதுடன், புதுவருட தினத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவரும் வவுனியா போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment