இரட்டைப் பெண் குழந்தைகளுடன் முழுக்குடும்பமே மரணித்த துயரம்.....................
மஹியங்கனையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான 10 பேரின் பெயர் விவரங்களையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
ஹயஸ் வானில் பயணித்த மட்டக்களப்பைச் சேர்ந்த முழுக் குடும்ப உறுப்பினர்களே இந்த விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். அவர்களில் இரட்டைப் பெண் குழந்தைகளும் மரணித்த துயரம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெரும் சோகத்தால் மட்டக்களப்பு மாவட்டம் கண்ணீரில் மூழ்கியுள்ளது.
ஜோசப் ரெலின்டன் ஜோப்ஸ் (வயது - 56), அவரது மனைவி சில்வியா ஜோப்ஸ் (வயது - 50), அன்ரனி லிஸ்டர் அலெக்ஸாண்டர் (வயது - 35), அவரது மனைவி நிசலி அலெக்ஸாண்டர் (வயது - 27), அவர்களது இரட்டைப் பெண் பிள்ளைகளான ஹனாலி அலெக்ஸாண்டர் (வயது - 04), பைகா அலெக்ஸாண்டர் (வயது - 04), யூட் பிரின்ஸ் ஹென்ரிக்ஸ் (வயது - 48), அவரது மனைவியான மரியா பென்சியா ஹென்ரிக்ஸ் (வயது - 42), அவர்களது மகளான செரேப் ஹென்ரிக்ஸ் (வயது 10), அவர்களது மகனான யூட் பிரின்ஸ் ஹெய்ட் ஹென்ரிக் (வயது - 19) ஆகியோரே இந்தக் கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, யூட் பிரின்ஸ் ஹென்ரிக்ஸின் மகளான செகானி ஹென்ரிக்ஸ் (வயது - 13) மற்றும் ரெசானி பெர்கஸால் (வயது - 16) ஆகியோர் படுகாயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment