நாட்டில் இன்று காலைஇடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 3 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஹியங்கனை - பதுளை பிரதான வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலையின் முன்னால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று 17.04.2019 அதிகாலை 1.35 அளவில் இடம்பெற்ற விபத்தில் தனியார் பஸ் வண்டியொன்றும் வேன் ஒன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டுள்ளன.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் படுகாயமடைந்த, 2 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுள் 3 பெண்களும் 3 குழந்தைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வேன் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே, விபத்துக்கான காரணம் என ஆரம்ப கட்ட கொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் பஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment