பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக தலைவர் வைகோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம் இடம்பற்றது.
இதன்போது கருப்புக்கொடி காட்டியும், கருப்பு பலூன்களையும் வானில் பறக்கவிட்ட வைகோ மற்றும் அவரது கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் மீது பாஜகவினர் கல்வீச்சில் ஈடுபட்டதால் மதிமுக - பாஜக மோதல் காரணமாக காவல்கிணறு பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியது. இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்யாமல் போலீசார் வேடிக்கை பார்ப்பதாக மதிமுகவினர் குற்றம் சாட்டினர்.
இதே போல் கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் ஹேஷ்டேக் #GoBackModi இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வரும் போது எல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகும். இன்று மோடி தமிழகம் வந்த நிலையில் மீண்டும் டிரெண்டாகியுள்ளது.
#GoBackModi #Vaiko #BlackFlag #IndiaAgainstTerrorism #PulwamaAttack #SurgicalStrike2 #NarendraModi #IndianAirForce #IndiaStrikesBack #TamilNewsKing
0 comments:
Post a Comment