தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய சந்தேக நபராக கருதப்படும் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் பொலிசார் அதிரடியாக சோதனை நடத்தியதில் பல ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
அதன்படி பொள்ளாச்சியில் இருந்து சின்னப்பாளையம் என்ற கிராமத்தில் திருநாவுக்கரசின் பண்ணை வீடு உள்ளது. பண்ணை வீட்டில் திருநாவுக்கரசும் அவரது நண்பர்களும் மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தகவல் வெளிவந்தநிலையில் 10-க்கும் மேற்பட்ட பொலிசார் அந்த பண்னை வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதே போல் திருநாவுக்கரசின் கூட்டாளிகளில் ஒருவரான சதீஸ் என்பவருடைய தந்தை பொள்ளாச்சி நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையிலும் பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
#CBCID #FarmHouse #PollachiAbuse #Riswanth #Thirunavukkarasu #PollachiIssue #BarNagaraj #PollachiThirunavukkarasu #Sabarirajan #Sabari #PollachiCBCID #PollachiUpdate #PollachiNews #PollachiJeyaraman #NakkeeranNews #NakkeeranGopal #TamilNewsKing
0 comments:
Post a Comment