இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று ரஞ்சி மைதானத்தில் நடைபெறும் போட்டியிலும் வெற்றிப்பெறும் நோக்கில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு ஆஸ்திரேலிய எதிர்வரும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், இன்றைய போட்டியும் ஆஸ்திரேலிய அணிக்கு முக்கியான போட்டியாக அமையவுள்ளது.
இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment