' Rocketry' படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார் நடிகர் மாதவன். இந்தப் படத்துக்காக மாதவன் வைத்திருந்த அவருடைய லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாராகி வரும் படம் 'Rocketry'. இந்தப் படத்தின் teaser கடந்த அக்டோபரில் வெளியானது. அந்த teaserஇல் மாதவனும் ஆனந்த் மகாதேவனும் இணைந்து இந்த படத்தை இயக்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இயக்குனர் ஆனந்த் மகாதேவன் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்திலிருந்து விலகி விட்டாதாகவும் , முழுக்க முழுக்க மாதவன் இயக்கத்தில் இந்த படம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
' Rocketry - The Nambi Effect ' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் மாதவன் நம்பிநாராயணனாக நடித்து வருகிறார். ' Rocketry - The Nambi Effect ' படம் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
#ActorMadhavan #Rocketry #TheNambiEffect #Director #NambiNarayanan #RMadhavan #KollywoodNews #BollywoodNews #MadhavanNewLook #TamilNewsKing
0 comments:
Post a Comment