ஐ.நா. செல்லும் சுரேனிடம் மக்கள் மனுக்கள் கையளிப்பு!!!

ஐ.நா. செல்லும் வடக்கு ஆளுநர், வடக்கு மக்களின் மனுக்களை அங்கு முன்வைக்கவுள்ளார் என வெளிவரும் தகவல்கள் உண்மை அல்ல. அவரால் அங்கு அவ்வாறு செயற்பட முடியாது. ஐ.நா ஒன்றும் தபால் நிலையம் அல்ல. இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று  சீறியுள்ளார் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க.


வடக்கு ஆளுநர் வெறுமனே ஜனாதிபதியின் பிரதிநிதியாகச் செல்கிறாரே தவிர  தமிழ் மக்களின்  பிரச்சினைகளை அங்கு சொல்வதற்கோ அல்லது மக்கள் எண்ணங்களை நிறைவேற்றவோ அவர் அங்கு செல்லவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

மக்கள் பிரச்சனைகளை ஜநாவில் தெரியப்படுத்தாதவர்களையே இலங்கை அரசு ஒவ்வொரு தடவையும் ஜெனீவாவுக்கு அனுப்பி வைப்பதாக  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெச்சலெட்டும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில்  இலங்கை அரசின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் அமுனுகம மற்றும் மகிந்த சமரசிங்க ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டனர்.



Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment