ஹேம் பிரியர்களுக்காக ஹேமிங் கணினி, ஹேமிங் மடிக்கணினி என்பன அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இவற்றின் வரிசையில் ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதன்படி உலகின் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசியினை சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
சாம்சுங் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள ஸ்மார்ட் கைப்பேசிக்கு Galaxy A90 எனப் பெயரிட்டுள்ளது.
அத்துடன் இதன் சில சிறப்பம்சங்களையும் வெளியிட்டுள்ளது.
இக் கைப்பேசியே குறித்த ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசியாக இருக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இக் கைப்பேசியின் கமெரா தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி 48 மெகாபிக்சல்களை உடைய கமெராவினை உள்ளடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஏனைய சிறப்பம்சங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment