ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டத்தில் பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வினின் செயல்பாடு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்வின் பந்து வீசிய போது, பேட்ஸ்மேனுக்கு எதிர்முனையில் இருந்த ராஜஸ்தான் வீரர் பட்லர், கிரீஸை விட்டு வெளியேறிய நேரத்தில், ரன் அவுட் செய்தார் அஸ்வின். இது பெரும் வாக்குவாதத்தை தோற்றுவித்தது.
அஸ்வின் வேண்டுமென்றே நின்று, பட்லர் கிரீஸை விட்டு வெளியேற விட்டுவிட்டு ரன் அவுட் செய்தார் எனக் கூறப்பட்டது. ஆனாலு, அம்பயர் முடிவால் பட்லர் வெளியேறினார்.
தான் ஆட்டமிழந்தவுடன் ஜோஸ் பட்லர் மிகுந்த கோபத்துடன் சத்தம்போட்டபடி வெளியேறினார்.
இதுபோன்று “மன்கட்” அவுட் செய்யும் முன், பந்துவீச்சாளர் பேட்ஸ்மேனிடம் எச்சரிக்கை செய்வார், க்ரீஸை விட்டு பந்துவீசும் முன் வெளியே வராதீர்கள் என்று நடுவர் முன்னிலையில் எச்சரிக்கை செய்து, அதன்பின் மீண்டும் அதே தவறைச் பேட்ஸ்மேன் செய்தால், அவுட் செய்யப்படுவார். இது கிரிக்கெட் உலகில் ‘மன்கடட்’ என்று கூறப்படும்.
ஆனால், நேற்று அஸ்வின் பந்துவீசும் தனது செயலை செய்யும் முன்பே, பட்லரை கோட்டை விட்டு வெளியே சென்றவுடன் ஆட்டமிழக்கச் செய்துவிட்டார். இதனால் அங்கு பெரும் சர்ச்சை வெடித்தது.
ஆனால், நல்ல பார்மில் நின்று பட்லர் விளையாடிக்கொண்டிருக்கையில் அஸ்வின் தனது நேர்மையற்ற முறையில் ஆட்டமிழக்கச் செய்தது சரியல்ல என விமர்சனம் எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment