இந்திய கிரிக்கெட் வீரரான கெளதம் கம்பீர் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ரவி ஷங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஆரம்ப ஆட்டக்காரரான கெளதம் கம்பீர், கடந்த ஆண்டு அனைத்துப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஓய்வு பெற்றதிலிருந்தே கெளதம் கம்பீர், பல்வேறு சமூக கருத்துக்களை கூறுவதுடன், அவ்வப்போது பாதுகாப்பு விடயங்கள் பற்றிய கருத்துக்களையும் கூறி வருகிறார்.
இதனால் விரைவில் அரசியலில் கால்பதிக்கலாம் என பலரும் கூறிவந்த நிலையில், "எனக்கு ஒரு இளம் குடும்பம் இருக்கிறது. அவர்களைப் பற்றி நான் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் நான் குறைந்த நேரம் மட்டுமே அவர்களுடன் செலவழித்திருக்கிறேன் என ஏற்கனவே கம்பீர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே பாஜக கட்சியில் கெளதம் கம்பீர், மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ரவி ஷங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.
பாஜகவின் சார்பில் டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிடலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment