பாலியல் அத்துமீறல் ; வெளிச்சத்துக்கு வந்த திடுக்கிடும் தகவல்

 கல்லூரியில் ஆசிரியையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கல்லூரி நிறுவனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தமிழகத்தின் கன்னியாகுமரி அருகில் உள்ள ஜேக்கப் பாராமெடிக்கல் கல்லூரியில் நடந்துள்ளது.

இறைச்சகுளத்தில்  குறித்த கல்லூரியை நடத்தி வருபவர் ரவி. இவர் இங்கு பணியில் உள்ள ஆசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாகவும் இவருக்கு ஒத்துழைக்காத ஆசிரியைகளை பணி நீக்கம் செய்து விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளிவந்தன.

இந்த நிலையில் அங்கு பணிபுரிந்த ஆசிரியை ஒருவரிடம் தொடர்ச்சியாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரவி சம்பவத்தன்று அவரது அலுவலக அறையில் வைத்து பலாத்கார முயற்சியிலும் இறங்கி உள்ளார்.

அவரிடமிருந்து தப்பி வந்த ஆசிரியை நடந்த விவரத்தை மாணவிகளிடம் தெரிவித்து  கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து மாணவிகளின் துணையுடன் அந்த ஆசிரியை ரவியின் அத்துமீறல்கள் குறித்து பொலிஸில் புகார் அளித்தார்.  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், மாணவிகளை அழைத்து நேரடியாக விசாரித்தார். அப்போது ரவி குறித்து திடுக்கிடும் பல தகவல்கள் வெளியானது.

ரவி நீண்ட நாள்களாக ஆசிரியைகளையும், மாணவிகளையும் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தி வந்துள்ளார். மாணவிகள் விடுதியில் இரகசிய கமெராக்களை வைத்து படம் பிடித்து வந்ததாகவும்  மாணவிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கல்லூரியில் யாராவது விசாரிக்க வந்தால் அவர்களிடம் கல்லூரியில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று கூறி சமாளிப்பதற்கு என்றே நளினி, கலா என இரு பெண் ஊழியர்களை ரவி பணிக்கு அமர்த்தி இருந்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ரவியையும் நளினி, கலா ஆகிய இரு ஊழியர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.

ரவி பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதற்காகவே சொந்தமாக பாராமெடிக்கல் கல்லூரி நடத்தி வந்த அதிர்ச்சித் தகவலும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுவரை 20 மாணவிகள் 5 ஆசிரியைகள், ரவியால் பாதிக்கப்பட்டுள்ளதாக  முறைப்பாடு எழுந்துள்ள நிலையில் பொலிஸார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment