வாக்கெடுப்பு இன்றி நிறைவேறிய தீர்மானம்

பிரித்தானியா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் அனுசரணையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட புதிய பிரேரணை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணை இன்றைய தினம் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

பிரேரணைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கிய காரணத்தால் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

மனித உரிமைகள், மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறலை விரிவுப்படுத்தல் என்ற தலைப்பிலான இந்த பிரேரணையின் ஊடாக, 2015 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகால மேலதிக அவகாசக் காலத்தில், மனித உரிமைகள் பேரவையின் இரு அமர்வுகளில் இலங்கை குறித்த இரண்டு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment