சொந்த மண்ணிலே தோற்றுப்போன பெங்களூர்

மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில், பெங்களூர் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தன் செந்த மண்ணிலேயே தோல்வியைச் சந்தித்தது.

பெங்களூரில் நடைபெற்ற ஏழாவது லீக் போட்டியில் ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.


நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதையடுத்துக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா  48 ஓட்டங்கள், டிகாக் மற்றும் யுவராஜ் சிங் 23 ஓட்டங்கள், சூர்யகுமார் யாதவ்  38 ஓட்டங்கள், , ஹர்திக் பாண்டியா 32 ஓட்டங்களை எடுத்துக் கொடுத்துக் கைகொடுக்க, அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 187 ஓட்டங்கள் எடுத்தது.


எட்டக்கூடிய இலக்கை துரத்திய பெங்களூர் அணிக்கு, மொயின் அலி 13 ஓட்டங்கள் பார்த்தீவ் படேல் 31 ஓட்டங்கள் எடுத்து சுமாரான ஆரம்பத்தை அளித்தனர். தொடர்ந்து வந்த கோஹ்லி  46 ஓட்டங்கள் எடுத்து, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.


பின்னர் வந்த ஹேட்மேயர் 5 ஓட்டங்களுடனும் , கிராண்ட்ஹோமே 2 ஓட்டங்களையும் எடுத்து ஏமாற்றினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிவிலியர்ஸ் அரைசதம் கடந்தார்.


இந்த நிலையில் பெங்களூர் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதிலும் வெறும் 13 ஓட்டங்கள் மட்டும் எடுக்க, 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 181 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment