ஐக்கிய தேசிய கட்சியினால் முன்னெடுக்கப்படும் சிறிகொத்த - கிராமத்திற்கு என்ற வேலைத்திட்டம் இன்று களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் வாழகின்ற மக்களை தெளிவுப்படுத்தி இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிகொத்த - கிராமத்திற்கு என்ற வேலைத்திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை சகல மாவட்டத்திற்கும் விஸ்தரிக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டள்ளார்.
0 comments:
Post a Comment