நுவரெலியா, ஹக்கல தாவரவியல் பூங்காவுக்கு அண்மையில் வியாபாரிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஹக்கல பூங்காவுக்கு அருகில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 42 கடைகளின் உரிமையாளர்கள் தாவரவியல் பூங்காவின் நடத்துநர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனால் பூங்காவைப் பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகளை, பூங்காவுக்குள் நுழைய விடாது பூங்காவின் நுழை வாயிலை மூடி, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது வியாபார நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில், பூங்கா நிர்வாகம் தான்தோன்றித் தனமாகச் செயற்பட்டு வருவதாகக் கூறியே, ஆர்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 comments:
Post a Comment