போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பேருவளைப் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேருவளைக்கு வருகை தந்த குறித்த நபர் அங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனைக்காகவே அவர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து, குடு எனப்படும் போதைப்பொருள் 3 கிராம், 5 கிராம் ஐஸ், ஹஷீஷ் 15 கிராம் மற்றும் டிஜிட்டல் தராசு ஆகியவற்றை பொலிஸார் மீட்டனர்.
சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment