விடுவிக்கப்பட்ட நிலத்தில் இராணுவத்தினர் குப்பைகள் வீசுவதாக குற்றச்சாட்டு!
மன்னார் யாழ்ப்பாண பிரதான வீதி, நாவற்குளம், திருக்கேதீஸ்வரம் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த காணிகள் சில வருடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டது.இந்நிலையில் விடுவிக்கப்பட்ட நிலத்தில் இராணுவத்தினர் தொடர்ந்தும் குப்பைகள் வீசுவதாக மன்னார் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.திகளில் உள்ள குப்பைகளை தமது காணிகளுக்குள் கொண்டுவந்து கொட்டுவதாக மன்னார் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் துணிகள், தொப்பிகள், குறிப்பேடுகள் மற்றும் இராணுவம் பயன்படுத்தும் மருந்துகள் ஆகியன வீசப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் கேட்டுள்ளனர்.மேலும் தற்போதும் இராணுவ முகாம் மற்றும் இராணுவப் பகுதிகளில் உள்ள குப்பைகளை தமது காணிகளுக்குள் கொண்டுவந்து கொட்டுவதாக மன்னார் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இது குறித்து உரிய தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்களா என மன்னார் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்
0 comments:
Post a Comment