ஜெனீவாவில் சூடு பிடிக்கும் முரண்பாடுகள் !!!

ஜெனீவாவில் சூடு பிடிக்கும் முரண்பாடுகள் !!! குற்றவாளிகளை காப்பாற்ற நடக்கும் நாடகம்...

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் பதவிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் - நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்த முரண்பாடு இப்போது ஜெனீவாவில் பற்றியெரியும் சூழல் உருவாகியிருக்கிறது.


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு தரப்புகளும் வௌ;வேறு அணுகுமுறைகளை கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை மீது வரும் 20ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது. அதற்குப் பின்னர் இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றும் முன்வைக்கப்படவுள்ளது. இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவது என்று அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது, வெளிவிவகார அமைச்சின் அறிக்கை அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஜெனீவாவுக்கு இம்முறை கொழும்பில் இருந்து அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளை அனுப்புவதில்லை என்று வெளிவிவகார அமைச்சினால் முடிவு செய்யப்பட்டதுடன், ஜெனீவாவில் உள்ள இலங்கைப் பிரதிநிதி அசீஸ் ஏனைய அதிகாரிகளுடன் இந்த விவகாரங்களைக் கையாளுவார் என்றும் அறிவிக்கப்படிருந்தது.

இந்தச் சூழ்நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சார்பில் ஜெனீவா கூட்டத்தொடருக்கு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க ஆகியோரை அனுப்பியுள்ளார்.

யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் பழைய காயங்களைக் கிளறிக் கொண்டிருக்காமல் எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்ள ஐ.நா அனுமதிக்க வேண்டும் என்றும், ஐ.நா விற்கு அழுத்தங்கள் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் கோருவதற்கே அவர்களைத் தாம் அனுப்பவுள்ளதாக , ஜனாதிபதி கூறியிருக்கிறார். இதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  இலங்கை தொடர்பான தீர்மானங்களை முன்வைக்க வேண்டாம் என்பதும், அதற்கு இணங்குவதில்லை என்பதும் தான் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்பதை உணர முடிகிறது.

ஆனால் அரசாங்கமோ அதற்கு நேர் எதிர்மாறான நிலைப்பாட்டில் இருக்கிறது. பிரித்தானியா முன்வைக்கவுள்ள தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கிறது. இப்படியான நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எந்தத் தரப்பினது கருத்து அதிகாரபூர்வமானதாக இருக்கப்போகிறது என்ற கேள்வி எழுகின்றது.


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment