சிறுத்தை படம் மூலம் தமிழில் முன்னணி இயக்குனர் ஆனவர் சிவா. அன்றிலிருந்து இவரை சிறுத்தை சிவா என்று தான் அழைத்து வந்தனர்.
இந்நிலையில் சிவா அதை தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார்.
இவர் அடுத்து சூர்யாவுடன் கைக்கோர்ப்பதாக சில தகவல்கள் வந்துள்ளது, இதுக்குறித்து நம் தளத்தில் கூட கூறியிருந்தோம்.
ஆனால், சிவா ஒரு கதையை லாக் செய்துவிட்டால், அதில் ஹீரோ தலையிடுவதை விரும்பவே மாட்டாராம், அவர் சொன்ன காட்சி, இடத்தில் தான் எடுக்க வேண்டும் என்று இருப்பாராம்.
சூர்யா தன் படத்தில் அதிகம் தலையிடுவார் என்பதால், இந்த கூட்டணி எப்படி இணையும் என பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது.
0 comments:
Post a Comment