வர்த்தகர் ஒருவரிடம் கையூட்டல் பெற்றுக் கொண்ட குற்றத்தடுப்பு பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் அலுவலகர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சப்புகஸ்கந்த பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த வர்த்தகரின் வீட்டில் வைத்து கையூட்டலுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அலுவலகர் 80 ஆயிரம் ரூபாவை கையூட்டலாக பெற்றுள்ளார்.
குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் காசோலை மோசடி தொடர்பில் நீதிமன்றத்திற்கு தகவல்களை வழங்க வேண்டாம் என தெரிவித்து இந்த கையூட்டல் வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரிய பொலிஸ் அலுவலகர் முன்னதாக பல தடவைகள் குறித்த வர்த்தகரிடமிருந்து பணம் பெற்றுள்ளதாகவும் இதுவரை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபாவை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment