ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதிக்கொண்டு முன்னணி பாடலாசிரியராக விளங்கியவர் பா.விஜய்.
ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பல படங்களிலும் நடித்திருந்தார். நடிகனாக வேண்டும் என்ற ஆசை நிறைவேறியதே தவிர அவர் நடித்த ஒரு படமும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இனியும் நடிப்பு மீது கவனம் செலுத்தினால் பொழப்பு கெட்டுவிடும் என்ற யதார்த்தத்தை உணர்ந்த பா.விஜய் மீண்டும் பாடல் எழுதுவதில் கவனம் செலுத்தியுள்ளார்.
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த நிலையில் அவரை சந்தித்து பா.விஜய் வாய்ப்பு கேட்டதால். இந்த படத்தில் அஜித் - வித்யாபாலன் நடிக்கும் காட்சிக்காக ஒரு பாடலை எழுதும் வாய்ப்பை பா.விஜய்க்கு கொடுத்துள்ளார் யுவன்.
6 ஆண்டுகளுக்கு முன் அஜித் நடிப்பில் வெளியான 'ஆரம்பம்' படத்திற்காக யுவன சங்கர் ராஜா இசையில் அனைத்து பாடல்களையும் பா.விஜய் எழுதியிருந்தார்.
0 comments:
Post a Comment