பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் அனைத்தும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை திறந்துவிடப்பட்டுள்ளதாக மேல்கொத்மலை நீர்த்தேக்க பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பழுது பார்க்கும் வேலைகள் இடம்பெற்று வருகின்றமையால் இந்த வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் நீர்மட்டம் குறைந்துள்ளமையால் பொதுமக்கள் நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் நடமாடுவதையும் அதில் இறங்குவதையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் மேல்கொத்மலை நீர்த்தேக்க பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment