மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 ஆவது 20க்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றது.
187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 11.5 ஓவர்களில் 45 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
மேற்கிந்திய அணி சார்பில் ஷிம்ரோன் ஹெட்மர் மற்றும் கேர்லொஸ் ப்ரெத்வெய்ட் ஆகியோர் தலா 10 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
இரு துடுப்பாட்டக்காரர்கள் ஓட்டம் எதனையும் பெறாத நிலையிலும், ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் ஜோர்டான் 6 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றிய நிலையில், மேலும் 3 பந்துவீச்சாளர்கள் தலா இரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி, 45 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்ததன் ஊடாக 20க்கு 20 போட்டிகளில் ஆகக் குறைந்த ஓட்டங்களை பெற்ற அணிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இலங்கை அணிக்கு எதிராக கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 10.3 ஓவர்களில் 39 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment