இலங்கையின் பிரதான குற்றங்களுடன் தொடர்புடைய புளூமென்டல் சங்க எனும் டி.சங்க என்பவரும் மற்றுமொரு இலங்கையரும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இருந்த மற்றுமொரு இந்திய பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராமநாதபுரம், தங்கப்பா நகர்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், சந்தேகமான முறையில் சிலர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராமநாதபுரம் கேணிக்கரை பொலிஸார், குறித்த வீட்டைச் சுற்றிவளைத்து சோதனையிட்டனர். இதன்போது வீட்டில் பதுங்கியிருந்த இலங்கை வாலிபர்கள் இருவர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்தனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, தங்கியிருந்த குற்றச்சாட்டிற்காக குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கொழும்பைச் சேர்ந்த 33 வயதுடைய டி. சங்க மற்றும் 28 வயதுடைய சப்ராஸ் மொஹமட் என்றும் இவர்கள் இலங்கையில் நடந்த கொலைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டுவிட்டு, அங்கிருந்து கள்ளத்தனமாக கடலால் இந்தியாவிற்கு வந்ததுள்ளதும் தெரியவந்ததுள்ளது.
சட்டவிரோதமாக இந்தியாவுக்கு சென்ற புளூமென்டல் சங்க தனது பெயரை குமார் என்றும் தனது வசிப்பிடம் திண்டுகல் எனவும் குறிப்பிட்டு அடையாள அட்டை ஒன்றையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment