சிவா இயக்க, இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க தமிழில் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வெளிவந்த படம் 'விஸ்வாசம்'.
ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்திற்குப் போட்டியாக வந்தாலும் வசூலில் முதலிடத்தைப் பிடித்தது 'விஸ்வாசம்'.
அஜித் நடித்து வெளிவந்த படங்களிலேயே இந்தப் படத்திற்குத்தான் அதிகமான வசூல் என கோலிவுட்டில் பேசினார்கள்.
இந்தப் படம் தெலுங்கில் அதே பெயரில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 1 இல் வெளியானது. 'ஜகமல்லா' என்ற பெயரில் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 7இல் வெளியானது. ஆனால், தமிழில் சாதனை வெற்றியைப் புரிந்த இந்தப் படம் தெலுங்கு, கன்னடத்தில் தோல்வியைச் சந்தித்தது.
தெலுங்கில் 'விஸ்வாசம்' படம் வெற்றிக் கணக்கை ஆரம்பித்து வைக்கும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை.
0 comments:
Post a Comment