ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனவின் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அடுத்த வாரம் ஜெனிவாவுக்கு பயணமாகவுள்ளது.
இதில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வெளிவகார அமைச்சின் செயலர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி மன்றாடியார் நாயம் ஏ.நெரீன்புள்ளே ஆகியோர் அடங்குகின்றனர்.
இந்த நிலையில், ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள இந்தக் குழு நாளைய தினம் கொழும்பில் கூடி, கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை குழுவினர் ஜெனிவாவுக்கு புறப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment