இடையூறுகள் எதுவுமின்றி சிவராத்திரி நிகழ்வுகள் திருக்கேதிஸ்வரத்தில் சிறப்பான முறையில் இடம் பெற்று வருகின்றது.
இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த பல ஆயிரக்கனக்காண பக்தர்களுடன் சிவராத்திரி இடம் பெற்று வருகின்றது.
யாழ்பாணம் வவுனியா முல்லைதீவு கிளிநொச்சி மற்றும் சிங்கள பகுதிகளில் இருந்தும் அனேகமான பக்தர்களும் சிவராதிரி நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
சமய நிகழ்வுகளுடன் பூஜைகள் இடம் பெறுவதுடன் பல்வேறு சொற்பொழிவுகள் மதம் சார் நிகழ்வுகளும் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
நேற்று மாந்தை ஆலயத்தின் அருகில் திருக்கேதீஸ்வர நுழைவுப்பகுதி வளைவை அகற்றி புதிய அழங்கார வளைவு ஒன்றை இந்துக்கள் நிறுவ முற்பட்டபோது அங்கிருந்த கத்தோலிக்க மக்களுக்கும் இந்து மக்களுக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டது.
அலங்கார வளைவும் பிடிங்கி எறியப்பட்டது. எனினும் இன்று எந்த வித குழப்பங்களும் ஏற்படாமல் நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது
300 மேற்பட்ட பொலிஸார் மற்றும் போக்குவரத்து பொலிஸார் பாதுகாப்புக்காக குறித்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment