யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் கஞ்சா கொண்டு சென்றவர் இன்று அதிகாலை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 9 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.மாவட்ட புலனாய்வுப் பொறுப்பதிகாரி ஜெரோசன் தலமையிலான குழுவினர் குறித்த நபரைக் கைது செய்தனர்.
கிளிநொச்சி உதயநகரைச் சேர்ந்த சந்தேக நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கஞ்சாப் பொதியும் கைப்பற்றப்பட்டன.
குறித்த நபர் சான்றுப் பொருள்களுடன் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment