மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பணியாற்றி வந்த பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஜாமீன் கோரி நிர்மலா தேவி சாத்தூர் மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றங்களில் பலமுறை மனு அளித்தும் அவை நிராகரிக்கப்பட்டன. இறுதியாக அவர், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதோடு, அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது என்ற நிபந்தனையுடன் நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கினர்.
பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுடன் பழகி, அவர்களை சித்ரவதை செய்து ஆபாசமாக படம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வேளையில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளமை சந்தேகத்திற்கு இடமாகவுள்ளது.
#Nirmaladevi #SexualHarassment #DMK #ADMK #PollachchiIssue #PollachiIssue #Thirunavukkarasu #Sabarirajan #TamilnewsKing
0 comments:
Post a Comment