தேங்காய் பறிக்க கொண்டு சென்ற தடியினால் நபரொருவர் உயிரிழந்த சம்பவம் நீர்கொழும்பு - மீரிகம பிரதான வீதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.
53 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தேங்காய் பறிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இவர் தேங்காய் பறிப்பதற்கான நீளமான தடி ஒன்றினை மோட்டார் சைக்களில் எடுத்துச் சென்றுள்ளார்.
இதன்போதே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மீரிகம பகுதியிலிருந்து வந்த பேருந்துடன் மோதியது.
சம்பவ இடத்திலேயே குறித்தநபர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment