இந்தியாவில் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
சிறப்பாக செயல்படும் முதல்வர் யார் என்று சமீபத்தில் கருத்துக் கணிப்பு இந்தியாவில் நடத்தப்பட்டது. அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் அனைத்து துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாநில மக்களில் 68.3 சதவிதம் சந்திரசேகர ராவின் ஆட்சியில் திருப்தியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அவர் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இரண்டாவது இடத்தை இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூரும் ,3ஆவது இடத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்-வும், 4 ஆவது இடத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் உள்ளனர். 5 ஆவது இடத்தை கர்நாடக முதல்வர் குமாரசாமி பிடித்துள்ளார்.
கடந்த முறை நடந்த கருத்துக் கணிப்பில் முதன்மை இடத்தில் இருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இம்முறை 14 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதுபோல் சிறப்பாக செயல்பட்ட முதல்வர்களின் பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடைசி இடத்தைப் பிடித்துள்ளார்.
அவரின் செயல்பாடு, நிர்வாகம் ஆகியவை திருப்திகரமாக இல்லை என வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் ராவத் ஆகியோர் அவர்களது மாநிலங்களில் எதிர்பார்த்த ஆதரவைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment