மனிதப் புதைகுழிகளும் கணடுகொள்ளாத சர்வதேசமும்!!!

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான கார்பன் அறிக்கை வெளியான நிலையில் பரபரப்பத் தகவலொன்றும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


மன்னார்  சதொச வளாகத்தில் சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் வரையில் மீட்கப்பட்டது. அதில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டன. தொடர்ந்தும் அகழ்வப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மனிதப் புதைகுழியில் கிடைத்த என்புகளின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பீட்டா நிறுவனத்துக்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

கடந்த 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிக்கை நீதிமன்றுக்குக் கிடைத்ததாகவும்  குறித்த அறிக்கையை மன்னார் நீதிமன்றில் உரியமுறையில் விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ள முடியும் என்று புதைகுழி அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச கடந்த 6 ஆம் தெரிவித்தார். அந்த அறிக்கை மார்ச் 7 ஆம் திகதி நீதிமன்றில் இருந்து பெறப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் குறித்த என்புகள் 1499 –1719ஆம் ஆண்டுகளுக்கு உட்பட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment