பேஸ்புக்கில் மறுபடியும் சிக்கல் ???

சமீபத்தில் ஃபேஸ்புக் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தங்கள் தளத்தில் இருந்த கோளாறு ஒன்று சரி செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தது. அது 2 கோடிக்கும் மேலான கணக்குகளின் பாஸ்வேர்ட்கள் எந்த ஒரு என்கிரிப்ஷனும் இல்லாமல் பிளைன் டெக்ஸ்ட்டாக (Plain Text) மட்டுமே சேமிக்கப்பட்டிருந்தது என்பதுதான். இவற்றை சுமார் 20,000 ஃபேஸ்புக் ஊழியர்கள் பார்த்திருக்கமுடியும். இதனால் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் உடனடியாக அனைவரும் தங்களது ஃபேஸ்புக் பாஸ்வேர்டை மாற்றுமாறு வலியுறுத்திவருகின்றனர்.


இதனால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் எனக் கருதப்படும் கணக்குகளுக்கு இது குறித்து தெரிவிக்கப்படும் என்று ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இதனால் எந்தப் பாதிப்பும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று பயன்பாட்டாளர்களுக்கு நம்பிக்கையையும் தந்துள்ளது. இருப்பினும் யாரேனும் இதன் காரணமாக உங்களது பாஸ்வேர்டுகளை பெற்றிருந்தால், அது தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். எனவே உடனடியாக புதிய பாஸ்வேர்டை செட் செய்யுமாறும், two-factor authentication முறையை ஆன் செய்யுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் சைபர் வல்லுநர்கள்.

இந்த பாஸ்வேர்டை மற்ற கணக்குகளுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைகளில் சிக்கும் ஃபேஸ்புக்கில் நாம்தான் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதே வல்லுநர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. ஏற்கெனவே ஃபேஸ்புக் கணக்கை உடனடியாக அழியுங்கள் என ஒரு மாணவர் சந்திப்பில் எச்சரித்தார் வாட்ஸ்அப்பின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன்.


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment