புதையல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் எழுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மின்னேரியா மற்றும் பொலனறுவை பகுதி வீடொன்றின் பின் புறத்தில் புதையல் பெறும் நோக்குடன் அகழ்வுகள் இடம்பெறுவதாக பொலன்னறுவை புராதன சொத்து பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மூவர் கைது செய்யப்பட்டனர், இருவர் தப்பியோடினர்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மின்னேரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதன்போது கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பபட்ட பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுப்படுவதாக பொலனறுவை பொலிஸாருக்கு நேற்று மாலை கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது மேலும் நால்வர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment