கெளதம் மேனன் - தனுஷ் - எனை நோக்கி பாயும் தோட்டா...
ஞாபகம் உள்ளது தானே?
கெளதம் மேனன் - தனுஷ் கூட்டணி மற்றும் பாடல்களால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் மதன் கூறியுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
டிரெய்லர் தயார். பட வெளியீட்டுக்கு வேலைகள் செய்து வருகிறோம். எல்லாம் நல்லபடியாக நடந்தால் ஏப்ரலில் படம் வெளியாகலாம் என்று கூறியுள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் - எனை நோக்கி பாயும் தோட்டா. இசை - தர்புகா சிவா. இதன் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி, செப்டம்பர் 2018-ல் முடிந்தது. தணிக்கையில் இந்தப் படம் யு/ஏ பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment