யாழ்ப்பாணம் கால்பந்தாட்ட லீக்கின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்.மாவட்ட ரீதியாக நடத்தும் கால்பந்தாட்ட தொடரில் அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழக அணி.
துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு மின் ஒளியில் இடம் பெற்ற காலிறுதியாட்டத்தில் ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கொற்றவத்தை றேஞ்சர்ஸ்விளையாட்டுக் கழக அணி மோதியது.
முதற் பாதி ஆட்டத்தின் 26 நிமிடத்தில் ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழக அணியின் முதலாவது கோலை சயந்தன் பதிவு செய்தார்.
ஆட்ட நேர முடிவில் 1:0 என்ற கோல் கணக்கில் ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழக அணி முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதி ஆட்டத்தின் 55 நிமிடத்தில் ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழக அணியின் இரண்டாவது கோலினை அபினேஸ் பதிவு செய்தார்.
பதிலுக்கு ஆட்டத்தின் 75 நிமிடத்தில் கொற்றவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக அணியின் முதலாவது கோலினை மதுஷன் பதிவு செய்தார்.
ஆட்ட நேர முடிவில் 2 : 1 என்ற கோல் கணக்கில் ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது.
0 comments:
Post a Comment