முல்லையில் திருவள்ளுவர் விழா

முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் திருவள்ளுவர் விழா கல்லூரி அதிபர் பொ. பொன்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் யாழ்.தமிழ்ச்சங்கத்தினரின் “வள்ளுவர் காட்டிய வழியை வையகம் இன்று கைக்கொள்கின்றது – கைக்கொள்ளவில்லை“ என்ற பொருளில் பட்டிமன்றமும் இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின், இந்தியத் துணைத்தூதா் சங்கர் பாலச்சந்திரன், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் உமாநிதி புவனராசா, தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
.
திருவள்ளுவர் விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.





Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment