இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை இல்லாதொழிக்கும் வகையில், ஐந்தாண்டு தேசிய வேலைத்திட்மொன்று, முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பங்குபற்றலுடன், இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நிகழ்வு, கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment