மன்னார் மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து, மன்னார் மாவட்ட இந்து குருமார்கள் வெளியேறவுள்ளதாக, மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் அறிவித்துள்ளார்.
திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் அமைக்கப்பட்ட சிவராத்திரி வளைவு மாற்று மத மக்களால் நொருக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முழு முதற்கடவுள் சிவபெருமானின் மேன்மையான சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் மேற்படி சம்பவம் எமக்கு மிகுந்த மன வேதனையை தருகின்றது.
எம்மால் தொடர்ந்தும் சர்வமத பேரவையில் இருந்து செயல்பட விருப்பமில்லாத காரணத்தால் இந்துக்குருமார் பேரவை இந்துக் குருமார்கள் வெளியேறிக் கொள்ளுகின்றோம். என்றுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு அமைக்கும் பனிகள் நேற்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது இரு மதத்தினருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment