தமிழகத்தை ஆட்டிப்படைத்த பொள்ளாச்சி விவகாரத்தில் தற்போது வெளிவரும் மற்றொரு அதிர்ச்சி தகவல் தான் ஹரிஸ் என்பவன் பற்றியும் அவன் தலைமையில் இயங்குவதாக கூறப்படும் பெயிட் காங் பற்றியதும் ஆகும்.
தமிழகத்தில் தேர்தல் மற்றும் ஐ.பி.எல் களைகட்டியுள்ளதில் பொள்ளாச்சி விவகாரம் சற்று தணிந்துவருவதாக கூறப்படும் நிலையில் மீண்டும் பொள்ளாச்சி விவகாரத்தை பூதாகாரமாக மாற்றும் அதிர்ச்சி தரும் தகவல் தான் இந்த பெயிட் காங் பற்றியது.
பொள்ளாச்சி வழக்கில் ஏற்கனவே ஹெரோன் என்ற கேரள இளைஞன் கைதுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இந்த கைது இடம்பெற்றதா இல்லையா என்பது தெரியவில்லை.
இதற்கிடையில் நேற்றைதினம் ஹரிஸ் என்பவன் பற்றியும் அவன் தலைமையில் இயங்கும் பெயிட் காங் பற்றியும் புதிய தகவல்கள் கசிந்துள்ளன. அத்துடன் ஹரிஸ் தொலைபேசியில் உரையாடும் ஓடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. ஹரிஸ் ராஜா, ஹரிஸ் கோபால் எனும் பெயர்களில் சமூக வலைத்தளங்களில் உலாவும் இவன் பில்லா ஹரிஸ் என தனது பெயரை மாற்றி ரவுடித்தனம் செய்து வரும் ஒருவனாகவே தெரிவிக்கப்படுகின்றது.
30 வயது மதிக்கத்தக்க இந்த ஹரிஸ் தான் பொள்ளாச்சி விவகாரத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டுவரும் பெயிட் காங் தலைவன் என்றும் தகவல்க்ள தெரிவிக்கின்றன.
#PollachiIssue #PaidGang #PollachiJayaraman #PravinJayaraman #HarishGopal #Paid #Girls #ADMK #SexualHarrasment #Arrested #TamilnaduNews #TamilNaduPolice #PollachchiNews #PollachchiIssue #TamilnewsKing
0 comments:
Post a Comment